சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசுக்கு சில தினங்களாக கரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து அவர் தானாகவே முன் வந்து அனகாபுத்தூர் ஆரம்ப சுகாதார மையத்தில் பரிசோதனை செய்த போது, அவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யபட்டது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அனகாபுத்தூர் நகராட்சி ஆணையருக்குக் கரோனா - பணியாளர்களுக்குப் பரிசோதனை - Covid-19
சென்னை: அனகாபுத்தூர் நகராட்சி ஆணையருக்குக் கரோனா தொற்று காரணமாக அலுவலகத்தில் பணிபுரியும் 41 பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
Corona infection for municipal commissioner in Chennai
இச்சம்பவம் அனகாபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் நிரந்தர, தற்காலிக ஊழியர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் 41 பேர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது அனகாபுத்தூர் நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.