சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் புதிதாக 17 ஆயிரத்து 321 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 31 ஆயிரத்து 253 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் இரண்டு லட்சத்து நான்காயிரத்து 258 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மக்கள் நல்வாழ்வுத் துறை ஜூன் 9ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 332 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து 17 ஆயிரத்து 319 நபர்களுக்கும், ஆந்திரப் பிரதேசம், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவர் என 17 ஆயிரத்து 321 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை இரண்டு கோடியே 85 லட்சத்து 19 ஆயிரத்து 161 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 22 லட்சத்து 92 ஆயிரத்து 25 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இவர்களின் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தி மையங்களில் இரண்டு லட்சத்து நான்காயிரத்து 258 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்த 31 ஆயிரத்து 253 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 59 ஆயிரத்து 597 என உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 169 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 236 நோயாளிகளும் என 405 பேர் மேலும் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 170 என உயர்ந்துள்ளது.
மேலும் சென்னையில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 345 எனப் பதிவாகியுள்ளது. கோயம்புத்தூரில் இரண்டாயிரத்து 319 நபர்களும், ஈரோட்டில் ஆயிரத்து 405 நபர்களும் என வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் பதிவாகியுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு;
சென்னை : 5,20,877
கோயம்புத்தூர்: 1,95,362
செங்கல்பட்டு: 1,48,732
திருவள்ளூர் : 1,06,138
சேலம் : 75,701
மதுரை : 69,049
காஞ்சிபுரம் : 66,898
திருப்பூர் : 71,129
திருச்சிராப்பள்ளி : 63,338
ஈரோடு : 70,888
கடலூர் : 53,456
கன்னியாகுமரி : 54,601
தூத்துக்குடி : 51,083
தஞ்சாவூர் : 55,268
திருநெல்வேலி : 45,726
வேலூர் : 44,691
திருவண்ணாமலை : 44,989
விருதுநகர் : 41,560
தேனி : 39,854
ராணிப்பேட்டை : 37,626
விழுப்புரம் : 38,872
கிருஷ்ணகிரி : 36,041
நாமக்கல் : 38,467
திண்டுக்கல் : 29,520
திருவாரூர் : 33,962
நாகப்பட்டினம் : 33,972
புதுக்கோட்டை : 24,998
திருப்பத்தூர் : 25,521
தென்காசி : 24,738
கள்ளக்குறிச்சி : 23,841
நீலகிரி : 23,859
தர்மபுரி : 21,420
ராமநாதபுரம் : 18,316
கரூர் : 19,967
சிவகங்கை : 15,825
அரியலூர் : 13,215
பெரம்பலூர் : 10,018
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் : 1,004
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 1,075
ரயில் மூலம் வந்தவர்கள்: 428
இதையும் படிங்க: பாஜகவை வறுத்தெடுக்கும் ‘ஒன்றிய உயிரினங்கள்’