புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 730 நபர்கள், காரைக்காலில் 134 நபர்கள், மாஹேவில் 21 நபர்கள், ஏனாமில் 37 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இன்று (மே.24) மட்டும் மொத்தம் 922 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்ற இரண்டு வாரங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் உறுதி செய்யப்பட்டு வந்த தொற்று பாதிப்பு, இன்று குறைந்துள்ளது. மேலும் தொற்று பாதிப்பால் புதுச்சேரியில் 21 நபர்கள், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.