தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் மொத்தம் 1158 தெருக்களில் கரோனா தொற்றாளர்கள் - மாநகராட்சி தகவல்

By

Published : Jan 4, 2022, 5:33 PM IST

சென்னையில் மொத்தம் ஆயிரத்து 158 தெருக்களில் கரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா, ஒமைக்ரான் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் என்ணிக்கை 700-யை தாண்டி தீவிரம் அடைந்துள்ளது.

இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் தெருவைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அந்தப் பகுதி சுகாதார அலுவலர்களின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கரோனா பாதிப்பு

இந்த நிலையில் சென்னையில் 38 ஆயிரத்து 379 தெருக்களில் கரோனா பாதிப்பு எவருக்கும் இதுவரை கண்டறியப்படவில்லை. 988 தெருக்களில் மூன்றுக்கும் குறைவான கரோனா தொற்றாளர்கள் உள்ளனர்.

170 தெருக்களில் மூன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கரோனா தொற்றாளர்கள் உள்ளனர். 86 தெருக்களில் நான்கிற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கரோனா தொற்றாளர்கள் உள்ளனர்.

51 தெருக்களில் ஐந்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கரோனா தொற்றாளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 228 தெருக்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: TN Assembly Session: ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

ABOUT THE AUTHOR

...view details