சென்னையைப் போலவே, அண்டை மாவட்டமான செங்கல்பட்டிலும் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இந்நிலையில் பல்லாவரத்தை அடுத்த சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் காவலர் ஒருவருக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால், அவர் கரோனா பரிசோதனைக்குள்படுத்தப்பட்டார்.
முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் சங்கர் நகர் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. மேலும், அங்குள்ள மற்ற காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.