தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கரோனா! - Chennai IIT

சென்னை ஐஐடியில் தங்கிப் படித்து வந்த 12 பேருக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

Corona
Corona

By

Published : Apr 21, 2022, 1:33 PM IST

Updated : Apr 21, 2022, 7:17 PM IST

சென்னை: சென்னை ஐஐடியில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. கரோனா முதல் அலையின் போது சென்னை ஐஐடியில் படித்த மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

சென்னை ஐஐடியில் கரோனா: அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 2ஆவது அலையின் போது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கிண்டி கரோனா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 3ஆவது அலையிலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னை ஐஐடியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தினசரி 25 முதல் 30 என்ற அளவில் பதிவாகி வருகிறது. சென்னையில் பாதிப்பை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது சுகாதாரத்துறை ஏப்.20ஆம் தேதி வெளியிட்ட தகவலில் தமிழ்நாட்டில் 27 பேருக்கும், கனடாவில் இருந்து வந்த 4 பேருக்கும் பாதிப்பை கண்டறிந்துள்ளது.

நேரில் சென்ற ராதாகிருஷ்ணன்: சென்னையில் 16 பேர் கராேனாவால் பாதிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை ஐஐடி விடுதியில் தங்கி இருந்த 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கரோனா!

மாணவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்தும், தேவையான உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். கரோனா பாதித்த 12 பேரும் தரமணி விடுதியில் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த 300 பேருக்கு இன்று கரோனா பரிசோதனை செய்ய உள்ளனர். மற்ற மாணவர்களுக்கும் மாநகராட்சியால் கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க : 5 மாநிலங்களுக்கு கரோனா எச்சரிக்கை!

Last Updated : Apr 21, 2022, 7:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details