தமிழ்நாட்டில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களில் 27 உறுப்பினர்கள் கரோனா வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது மொத்தமுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களில் 10 விழுக்காடு ஆகும். இதில் மூன்று அமைச்சர்களும் அடங்குவார்கள்.
இதனிடையே, சட்டப்பேரவை தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் தொகுதியில் மக்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உறுப்பினர்கள் உள்ளனர்.
அதனால் மக்களை சந்திக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனமாக பின்பற்றவேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துவருகின்றனர்.
கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் அதிமுகவையும், 11 பேர் திமுகவையும், மீதமுள்ள மூன்று பேர் மற்ற கட்சியையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
சட்டப்பேரவை உறுப்பினர்களில் முதன் முதலில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க:சாத்தான்குளம் எஸ்.எஸ்.ஐ. பால்துரை மரணம்!