சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகப் பணியாற்றிவந்தவர் பாலமுரளி. இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஹர்ஷவர்தினி, நிஷாந்த் என்ற மகளும் மகனும் உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி பாலமுரளி உயிரிழந்தார்.
கரோனாவால் உயிரிழந்த முதல் காவல் ஆய்வாளர்: முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய குடும்பத்தினர்! - Corona died police inspector
சென்னை: தமிழ்நாடு காவல் துறையில் கரோனாவினால் உயிரிழந்த முதல் ஆய்வாளர் பாலமுரளியின் மனைவி, காவலர் குடியிருப்பில் தங்க அனுமதிக்கக்கோரி முதலமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.
கரோனாவினால் உயிரிழந்த முதல் ஆய்வாளர் பாலமுரளி
தமிழ்நாடு காவல் துறையில் கரோனா ஏற்பட்டு உயிரிழந்த முதல் ஆய்வாளர் பாலமுரளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது மனைவி கவிதா தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆகிய மூன்று பேருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
மேலும், தனது மகன் தற்பொழுது எட்டாம் வகுப்புப் படித்துவருவதாகும் மகனின் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு என மொத்தம் எட்டு ஆண்டுகள் படிப்பு முடியும்வரை தங்களின் குடும்பத்தை குடியிருப்பில் தங்க அனுமதிக்க வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார்.
தற்போது செலுத்திவரும் அதே காவலர் குடியிருப்புக்கான வாடகை, மேலே குறிப்பிட்ட எட்டு ஆண்டுகளுக்குச் செலுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறிய அவர், தங்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இதையும் படிங்க: ஆய்வாளர் பாலமுரளியின் உருவப்படத்திற்கு மரியாதை!