சென்னை:மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஜூலை 5) வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 28 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்த 3,714 நபர்களுக்கும், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 3,715 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில இதுவரை மூன்று கோடியே 27 லட்சத்து 86 ஆயிரத்து 62 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் 25 லட்சத்து இரண்டு நபர்கள் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
இவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 34 ஆயிரத்து 926 பேர் மருத்துவம் பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் நான்காயிரத்து 29 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 32 ஆயிரத்து 17 என அதிகரித்துள்ளது.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனையில் 19 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 35 நோயாளிகளும் என 54 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்து 59 என அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5,33,637
கோயம்புத்தூர் - 2,22,020
செங்கல்பட்டு - 1,57,847
திருவள்ளூர் - 1,11,531
சேலம் - 89,442
திருப்பூர் - 83,886
ஈரோடு - 90,957
மதுரை - 72,681
காஞ்சிபுரம் - 70,584
திருச்சி - 70,149
தஞ்சாவூர் - 64,672
கன்னியாகுமரி - 59,316
கடலூர் - 58,434
தூத்துக்குடி - 54,522
திருநெல்வேலி - 47,323
திருவண்ணாமலை - 50,121
வேலூர் - 47,140