சென்னையில் கரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கடந்த வாரம் அண்ணா பல்கலைகழக மாணவர்கள் ஒன்பது பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அனைத்து கல்லூரி வளாகங்களில் கரோனா பாதுகாப்பு கண்கானிப்பு, கட்டுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை முகப்பேரிலுள்ள MMM செவிலியர் கல்லூரி மாணவிகள் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் 210 பேருக்கு பரிசோதனை செய்ததில் ஒன்பது மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர் மாணவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளன. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுவதாகவும், அனைவரும் நலமாக உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:சாத்தூரில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு