ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் துபாய் சென்ற இந்தியா்கள் இருவரை துபாய் விமான நிலையத்தில் சோதனை செய்ததில், அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த இரண்டு பயணிகளும் துபாயிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இந்தியாவிலிருந்து துபாய் வர, 15 நாள்கள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த இந்தியா்கள் இருவரின் மருத்துவச் செலவுகள் முழுவதையும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமே ஏற்க வேண்டும் என்றும் துபாய் விமானத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்துப் பயணிகளும் பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தின் வளாகப் பகுதியிலேயே, அந்தந்த விமான நிறுவன ஊழியா்கள் நின்று பயணிகளின் உடல் வெப்ப நிலையை சோதிப்பதோடு, அவர்களின் கரோனா மருத்துவப் பரிசோதனை சான்றிதழையும் சோதனை செய்கின்றனர்.