தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா பாதிப்பு: தமிழ்நாட்டில் இன்று 1559 பேருக்கு தொற்று உறுதி - கரோனா பாதிப்பு விவரங்கள்

தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 559 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

By

Published : Aug 26, 2021, 8:07 PM IST

சென்னை:கரோனா பரவல் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை இயக்குநரகம் இன்று (ஆக. 26) வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், தமிழ்நாட்டில் மேலும் புதியதாக ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 306 பேர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் ஆயிரத்து 559 பேர்களுக்கு கரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 6 லட்சத்து 38 ஆயிரத்து 494 பேர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் 26 லட்சத்து 7 ஆயிரத்து 206 பேர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 18 ஆயிரத்து 69 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் ஆயிரத்து 816 பேர் குணமடைந்து, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 54 ஆயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனையில் 6 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 20 நோயாளிகள் என 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 814 ஆக உயர்ந்துள்ளது.

கோயம்புத்தூரில் நேற்று (ஆக.25) குறைந்திருந்த தொற்றின் எண்ணிக்கை இன்று (ஆக.26) அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் புதிதாக 175 பேர்களுக்கும், செங்கல்பட்டில் 113 பேர்களுக்கும், ஈரோட்டில் 115 பேர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை - 5,43,249
  • கோயம்புத்தூர் - 2,35,041
  • செங்கல்பட்டு - 1,64,854
  • திருவள்ளூர் - 1,15,476
  • சேலம் - 95,835
  • திருப்பூர் - 89,957
  • ஈரோடு - 97,797
  • மதுரை - 73,932
  • காஞ்சிபுரம் - 72,657
  • திருச்சிராப்பள்ளி - 74,063
  • தஞ்சாவூர் - 70,473
  • கன்னியாகுமரி - 60,854
  • கடலூர் - 62,102
  • தூத்துக்குடி - 55,439
  • திருநெல்வேலி - 48,382
  • திருவண்ணாமலை - 53,191
  • வேலூர் - 48,775
  • விருதுநகர் - 45,727
  • தேனி - 43,177
  • விழுப்புரம் - 44,678
  • நாமக்கல் - 48,576
  • ராணிப்பேட்டை - 42,482
  • கிருஷ்ணகிரி - 41,998
  • திருவாரூர் - 38,863
  • திண்டுக்கல் - 32,458
  • புதுக்கோட்டை - 28,979
  • திருப்பத்தூர் - 28,546
  • தென்காசி - 27,028
  • நீலகிரி - 31,620
  • கள்ளக்குறிச்சி - 29,986
  • தருமபுரி - 26,713
  • கரூர் - 23,054
  • மயிலாடுதுறை - 21,737
  • ராமநாதபுரம் - 20,170
  • நாகப்பட்டினம் - 19,540
  • சிவகங்கை - 19,308
  • அரியலூர் - 16,270
  • பெரம்பலூர் - 11,671
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1020
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1082
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: அதிகமான கரோனா சிகிச்சை கட்டணம் - மருத்துவமனைக்கு நோட்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details