சென்னை:கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக நாள்தோறும் ஏறத்தாழ 25 ஆயிரம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவது குறித்து மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தற்போது, சென்னையில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட நபர்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக மத்திய சென்னையில் இருக்கும் அண்ணா நகர், கோடம்பாக்கம் தேனாம்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் கரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை மொத்தமாக ஐந்து லட்சத்து, 40 ஆயிரத்து 739 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.