ஆவடி காமராஜர் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டார். அப்போது கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து எவ்வாறு நம்மை காத்துக் கொள்வது என்பது குறித்து மாணவிகளுக்கு அவர் எடுத்துரைத்தார். பின்னர் கை கழுவும் முறை குறித்து, மருத்துவர்கள் மூலம் மாணவிகள் செய்து காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், “திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் அறிகுறி யாருக்கும் இல்லை. கரோனா வைரஸ் குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை. காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவமனைக்கு உடனடியாக வர வேண்டும். மருத்துவர்கள் சிகிச்சையளிக்க தயார் நிலையில் உள்ளனர்.