கரோனா நோய்க் கிருமித் தொற்றின் பாதிப்பு பல நாடுகளில் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாநில அரசின் உத்திரவின் பேரில், கரோனா நோய்க் கிருமி பரவாமல் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
காவல் நிலையத்தில் அரங்கேறிய கரோனா விழிப்புணர்வு நிகழ்வு! - மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்வு
சென்னை: மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் காவல்துறை சார்பில் கரோனா வைரஸ் தொற்று குறித்து காவலர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இவ்வேளையில் சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் காவல் துறையினர் சார்பில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு காவலர்களுக்கும், துப்புரவுப் பணியாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் அனைவரும் கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் யாரிடமும் கைகுலுக்கக் கூடாது, வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும், நோய் எதிர்ப்பு வைட்டமின் சி அதிகம் உள்ள காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும் போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் காவலர்களுக்கும், துப்பரவு பணியாளர்களுக்கும் விமான நிலைய காவல் உதவி ஆனையர் நடேசன் அவர்கள் முகக்கவசம் வழங்கினார்.