திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சியில், நிர்வாகம் சார்பில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஓவியம் 4 ஆயிரம் சதுர அடியில் வரையப்பட்டுள்ளது.
கரோனா விழிப்புணர்வு - தேசிய நெடுஞ்சாலையில் வரையப்பட்ட ஓவியம்! - கரோனா விழிப்புணர்வு
திருவள்ளூர்: சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கரோனா வைரஸ் ஓவியம் வரையப்பட்டு பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
art
பொதுமக்களிடமும், வாகன ஓட்டிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியத்தை, செங்குன்றம் காவல் ஆய்வாளர் ஜவகர் பீட்டர், பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் சமூக இடைவெளி விட்டு பார்வையிட்டனர். பாடியநல்லூர் ஊராட்சியின் இந்த பொதுநல செயலை அனைத்துத் தரப்பினரும் பாராட்டினர்.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்படும் சிகை திருத்தும் கலைஞர்கள் வாழ்வாதாரம்!