சென்னை:கரோனா தொற்று பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பரவல் விகிதம் மாநில அளவில் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஜுன் 21 ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விபரத் தகவலில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை 16,701 நபர்களுக்கு செய்யப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்த 736 பேருக்கும், ஐக்கிய அரசு நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் என 737 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா தொற்று கண்டறியப்பட்டது முதல் தற்பொழுது வரையில் 6 கோடியே 57 லட்சத்து 45 ஆயிரத்து 733 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு, 34 லட்சத்து 62 ஆயிரத்து 297 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 4,366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 322 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 19 ஆயிரத்து 905 என உயர்ந்துள்ளது.