சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 686 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று (ஜுன். 20) புதிதாக 17 ஆயிரத்து 112 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
அதில், அமெரிக்காவிலிருந்து வந்த 1 நபர், அரபிக் நாட்டில் இருந்து வந்த ஒருவர் உட்பட மேலும் 686 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 57 லட்சத்து 29 ஆயிரத்து 32 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.