சென்னை:பொதுச்சுகாதாரத் துறை இயக்குநரகம் இன்று (டிச.01) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், கர்நாடகா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் வங்கதேச நாட்டில் இருந்து வந்த ஒன்பது பேருக்கும் தமிழ்நாட்டிலிருந்த 709 பேருக்கும் என மொத்தமாக 718 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 312 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்த 709 நபர்களுக்கும், தமிழ்நாட்டிற்கு கர்நாடகாவிலிருந்து வந்த நான்கு நபர்களுக்கும், மேற்கு வங்கத்திலிருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், ஆந்திரப் பிரதேசம்,கேரளா மற்றும் வங்கதேச நாட்டில் இருந்து வந்த தலா ஒரு நபருக்கும் என மொத்தம் 718 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 34 லட்சத்து 38 ஆயிரத்து 259 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் 27 லட்சத்து 27 ஆயிரத்து 635 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு ஆளாகி இருந்தனர்.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 8,200 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 751 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரத்து 943 என உயர்ந்துள்ளது.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும் அரசு மருத்துவமனைகளில் 7 நோயாளிகளும் என 11 நோயாளிகள் இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 492 என உயர்ந்துள்ளது.
மேலும் சென்னையில் புதிதாக 117 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 118 நபர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு விவரம்:
சென்னை மாவட்டம் - 5,58,148
கோயம்புத்தூர் மாவட்டம் - 2,50,297
செங்கல்பட்டு மாவட்டம் - 1,73,841
திருவள்ளூர் மாவட்டம் - 1,20,231
ஈரோடு மாவட்டம் - 1,06,376
சேலம் மாவட்டம் - 1,01,392
திருப்பூர் மாவட்டம் - 97,230
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 78,466
மதுரை மாவட்டம் - 75,524
காஞ்சிபுரம் மாவட்டம் - 75,618
தஞ்சாவூர் மாவட்டம் - 76,115
கடலூர் மாவட்டம் - 64,406
கன்னியாகுமரி மாவட்டம் - 62,789
தூத்துக்குடி மாவட்டம் - 56,496
திருவண்ணாமலை மாவட்டம் - 55192
நாமக்கல் மாவட்டம் - 53534
வேலூர் மாவட்டம் - 50,210
திருநெல்வேலி மாவட்டம் - 49,661
விருதுநகர் மாவட்டம் - 46,397
விழுப்புரம் மாவட்டம் - 46,023
தேனி மாவட்டம் - 43,606
ராணிப்பேட்டை மாவட்டம் - 43,561
கிருஷ்ணகிரி மாவட்டம் - 43,848
திருவாரூர் மாவட்டம் - 41,873
திண்டுக்கல் மாவட்டம் - 33,239
நீலகிரி மாவட்டம் - 34,108
கள்ளக்குறிச்சி மாவட்டம் - 31,561
புதுக்கோட்டை மாவட்டம் - 30,330
திருப்பத்தூர் மாவட்டம் - 29,394
தென்காசி மாவட்டம் - 27,394
தர்மபுரி மாவட்டம் - 28,820
கரூர் மாவட்டம் - 24,635
மயிலாடுதுறை மாவட்டம் - 23,375
ராமநாதபுரம் மாவட்டம் - 20,633
நாகப்பட்டினம் மாவட்டம் - 21,340
சிவகங்கை மாவட்டம் - 20,397
அரியலூர் மாவட்டம் - 16,926
பெரம்பலூர் மாவட்டம் - 12,105
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,031
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,085
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க:'எதற்கும் துணிந்தவன்' டீஸர் ரிலீஸ் எப்போது?