சென்னையில் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தற்காத்துக்கொள்ள மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி பயன்படுத்தி கை கழுவும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் தங்களின் பொருட்களை எடுத்துச்செல்ல பயன்படுத்தும் லக்கேஜ் ட்ராலிகளுக்கு கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.