திருவான்மியூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், “ சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக, அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணையை தொடங்கியுள்ளோம். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான காரணம் தெரியவரும் ” என்றார்.
நடிகை சித்ரா தற்கொலைக்கு யார் காரணம்? காவல் ஆணையர் தகவல்! - காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்
சென்னை: நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் விரைவில் தெரியவரும் என மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
chithra
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 8 ஆம் தேதி, நசரத் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். உடற்கூராய்வில் சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து, ஆர்.டி.ஓ. மற்றும் காவல்துறை விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையும் படிங்க: பதிவுத் திருமணம் செய்துகொண்டது ஏன்? சித்ராவின் கணவரிடம் தொடர் விசாரணை