தியாகராய நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை, காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பார்வையிட்டு கண்காணிப்பு கேமரா மையம், சேவை மையங்கள் ஆகியவற்றை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” தி.நகர் மார்க்கெட் பகுதிகளில் ஏற்கனவே உள்ள 200 கேமராக்களுடன் கூடுதலாக 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற நிகழ்வுகளில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க முடியும்.
அசம்பாவிதங்களை தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் 2 ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும். கரோனா காலம் என்பதால் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10 விழிப்புணர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளி கடைபிடிப்பதை உறுதி செய்ய, வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 500 கூடுதல் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.