தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கர்ப்பம், கருகலைப்பு, தற்கொலை... சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்... - cop arrest in chennai

சென்னையில் காதலிப்பதாக கூறி சிறுமியை ஏமாற்றிய காவலர் கைது செய்யப்பட்டார்.

police-arrest-girl-for-inciting-suicide-in-chennai
police-arrest-girl-for-inciting-suicide-in-chennai

By

Published : Feb 10, 2022, 5:23 PM IST

சென்னையில் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 வயது சிறுமி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அத்துடன் தனது மரண வாக்குமூலத்தில், சென்னை மாதவரத்தில் பணிபுரியும் காவலர் கார்த்தி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தன்னிடம் சமூக வலைதளம் மூலம் பழகி காதலிப்பதாக கூறினார்.

இதை நம்பி இரண்டு முறை கர்ப்பமானேன். பின்னர் அவரது தூண்டுதலின்பேரில் கருக்கலைப்பு செய்தேன். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டார். எனது தற்கொலைக்கு அவரே காரணம் எனத் தெரிவித்தார்.

இதனடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணையில் சிறைக்காவலர் குற்றவாளி என்பது உறுதியானது. அதன்படி காவலர் கைது செய்யப்பாட்டார்.

இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக மாதவரம் துணை காவல் ஆணையர் வழக்கு தொடர்பான காவலரை பணியிடை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய காதலன்!

ABOUT THE AUTHOR

...view details