தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில் முரண்பாடு! - நீதிபதி - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் காவல்துறை மற்றும் நீதிமன்ற விசாரணையில் முரண்பாடுகள் இருப்பதால் மகளிர் நீதிமன்ற நீதிபதி, அரசு சிறப்பு வழக்கறிஞர், காவல்துறை அதிகாரி ஆகியோர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai highcourt
chennai highcourt

By

Published : Feb 27, 2021, 6:55 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு, 4 ஆம் வகுப்பு மாணவியை, அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் வன்கொடுமை செய்ததாக வந்த புகாரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ராஜா கைதானார். போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் இரு பிரிவுகளில் பதிவான வழக்கை விசாரித்த பெரம்பலூர் மகளிர் நீதிமன்றம், ராஜாவை குற்றவாளி என அறிவித்தது.

தீர்ப்பில், போக்சோ சட்டப்பிரிவில் 15 ஆண்டுகளும், இந்திய தண்டனை சட்டத்தின் இரு பிரிவுகளில் 7 ஆண்டுகள் மற்றும் ஓராண்டும் சிறைத் தண்டனை விதித்ததுடன், அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

பெரம்பலூர் மகளிர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ராஜா மேல்முறையீடு செய்த மனு, நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், ஆதாரங்களையும் பெரம்பலூர் நீதிமன்றத்திலிருந்து பெற்று தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

பின்னர் அவற்றை ஆராய்ந்த நீதிபதி, காவல்துறை மற்றும் நீதிமன்ற விசாரணைகளில் முரண்பாடுகள் இருப்பதைக் கண்டறிந்தார். எனவே காவல்துறையின் விசாரணை அதிகாரி மலர்க்கொடி, அரசு சிறப்பு வழக்கறிஞர் வினோத்குமார், தீர்ப்பளித்த நீதிபதி விஜயகாந்த் ஆகியோரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:'எத்தனை சம்பவம் பண்ணி இருக்கோம் தெரியுமா' - பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த கொள்ளையர்கள்!

ABOUT THE AUTHOR

...view details