தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தாம்பரம் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தாம்பரம் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர்.

தாம்பரம் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தாம்பரம் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

By

Published : Jun 23, 2021, 9:04 PM IST

சென்னை: தாம்பரம் மின்வாரிய அலுவலகத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்துவருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் சேலையூர் சரகத்தில் கணேசன் என்ற மின்வாரிய ஒப்பந்த பணியாளர் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதனால் ஒப்பந்த பணியாளர்கள் ஒன்றிணைந்து உயிரிழந்த ஒப்பந்த பணியாளரின் வீட்டிற்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் தாம்பரம் மின்வாரிய உயர் அலுவலர்கள் இழப்பீடு தராமல் ஒப்பந்த பணியாளர்கள் 200 பேருக்கும் சுமார் ஒரு மாத காலமாக வேலை ஏதும் கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர்.

இதையடுத்து ஒப்பந்த பணியாளர்கள் மின்வாரிய அலுவலர்களிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பணி தர மறுத்துள்ளனர்.

இதனால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் 200 பேரை மீண்டும் பணியமர்த்த கோரி தாம்பரம் மின்வாரிய செயற்பொறியாளரைக் கண்டித்து ஒப்பந்த பணியாளர்கள் தாம்பரம் மின்வாரிய வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர்.

அலுவலர்கள் மீண்டும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்த பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தர வில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details