சென்னை: எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச்செயலாளர் சுபின் கூறியதாவது, "கடந்த 2015ஆம் ஆண்டு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் (எம்ஆர்பி) போட்டி தேர்வில் தேர்வுச் செய்யப்பட்ட 7,243 செவிலியர்கள் அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு 1,788 செவிலியர்களும், 2018 ஆம் ஆண்டு 800 செவிலியர்களும், 2019 ஆம் ஆண்டு 1,725 செவிலியர்கள் என சுமார் 11 ஆயிரத்து 500 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்களில் தற்போது 8,000 செவிலியர்கள் ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தப் பணி முடிந்த சுமார் 3,000 செவிலியர்கள் மட்டுமே இன்றுவரை படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 4,800 செவிலியர்கள் 6 முதல் 7 ஆண்டுகள் கடந்தும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள 424 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 பணியிடங்களில் இரண்டு பணியிடம் மட்டுமே நிரந்தர பணியிடமாகவும், 8 பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகின்றது.