தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஏற்கனவே மாநகராட்சி சார்பில் பல்வேறு நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே பெய்த மழை மற்றும் தற்போது பெய்துவரும் மழை என சென்னையில் போதிய நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் சீராகும் என நம்பப்படுகிறது.
தொடரும் கனமழை... தண்ணீர் பஞ்சம் குறையுமா? ஏக்கத்தில் சென்னைவாசிகள் - Continuous heavy rain
சென்னை: தலைநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தண்ணீர் பஞ்சம் குறையுமா என பொதுமக்கள் ஏக்கத்துடன் காத்துள்ளனர்.
வெளுத்து வாங்கும் கனமழை
சென்னை நகரில் ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்த நிலையில் தற்போதைய பருவமழை பொதுமக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அதே சமயம் சாலைகளில் தண்ணீர் தேங்காதவாறு மாநகராட்சி துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு மழை நீரை அகற்றினால் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பின்றி இருக்கும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை - மேற்கூரை இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!