தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மசாஜ் சென்டர் சோதனை- நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சென்னை காவல் ஆணையர்

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் ஸ்பா மற்றும் மசாஜ் மையங்களின் தொழில் விவகாரங்களில் தலையிட்டதாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மசாஜ் சென்டர் சோதனை- நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சென்னை காவல் ஆணையர்
மசாஜ் சென்டர் சோதனை- நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சென்னை காவல் ஆணையர்

By

Published : May 17, 2022, 8:05 PM IST

Updated : May 17, 2022, 8:11 PM IST

சென்னை: ஸ்பா மற்றும் மசாஜ் மையங்களில் சட்டத்திற்குட்பட்டு, அமைதியாக நடத்தப்பட்டு வரும் நிலையில் அவற்றில் சென்னை காவல்துறையின் பல்வேறு காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் தலையிடுவதாக வில்லோ ஸ்பா நிறுவனத்தின் சார்பில் ஹேமா ஜுவாலினி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் உரிமம் பெற்று தொழில் நடத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், காவல்துறை தலையிடக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும் காவல் ஆய்வாளர்கள் தலையிட்டு ஆய்வு நடத்தும் வகையில், காவல் ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் ஆய்வாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஹேமா ஜுவாலினி தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தாக்கல் செய்த மனுவில், நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த உத்தரவை ஏற்று புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும், ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியதற்கு வருத்தம் தெரிவித்ததுடன், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார். இதனையேற்ற நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார் .

இதையும் படிங்க:கொள்கை முடிவு என்ற பெயரில் எல்லா திட்டங்களையும் மாற்றி மக்கள் வரிப்பணத்தை வீணாக்காதீர்கள் - உயர்நீதிமன்றம்!

Last Updated : May 17, 2022, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details