தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் குறையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்! - கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

சென்னை: சில நாட்களுக்கு முன்பு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 70ஆக அதிகரித்திருந்த நிலையில், தற்போது 57 ஆக குறைந்துள்ளது.

zones
zones

By

Published : Oct 14, 2020, 2:36 PM IST

சென்னையில் கரோனா வைரஸ் சில மண்டலங்களில் மட்டும் தீவிரமாக பரவி வருகிறது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்று பாதிக்கப்பட்டு வருகின்றனர். பரவலை தடுக்க மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்துவது, வீடு வீடாக சென்று பரிசோதனை செய்வது என பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர் வசிக்கும் தெரு முழுவதையும் தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து வந்தனர். இது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால், ஒரு தெருவில் மூன்று முதல் ஐந்து நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

தொற்று அதிகரித்து வருவதால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் சில நாட்களுக்கு முன்பு வரை அதிகரித்து வந்தது. இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி அன்று 70 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், தற்போது 57 ஆக குறைந்துள்ளது. அதன் பட்டியலையும் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

திருவொற்றியூர் - 3 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

மணலி - 4 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

தண்டையார்பேட்டை - 11 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

ராயபுரம் - 4 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

அம்பத்தூர் - 19 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

அண்ணா நகர் - 2 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

தேனாம்பேட்டை - 2 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

கோடம்பாக்கம் - 2 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

ஆலந்தூர் - 5 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

அடையாறு - 4 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

சோழிங்கநல்லூர் - 1 கட்டுப்படுத்தப்பட்ட பகுதி

மேற்கண்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், தன்னார்வலர்கள் மூலம் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: நீதிமன்றம் கண்டிப்பு; வழக்கை திரும்ப பெற்றார் ரஜினிகாந்த்!

ABOUT THE AUTHOR

...view details