தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’202’ - சென்னையில் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள தெருக்களின் எண்ணிக்கை! - தனிமைப்படுத்தப்பட்ட தெருக்கள்

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீடு உள்ள தனிமைப்படுத்தப்பட்ட தெருக்கள், மறு அறிவிப்பு வரும் வரை தொடர் கண்காணிப்பில் இருக்கும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

zone
zone

By

Published : Apr 28, 2020, 6:54 PM IST

உலகம் முழுவதும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று தீவிரமடைந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 673ஆக உயர்ந்துள்ளது. இதன் பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு அறிவிப்புகள் மேற்கொள்வது, கரோனா பாதித்தவர் வீடு இருக்கும் தெருக்களை தனிமைப்படுத்துவது போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.

இவ்வாறு சென்னையைப் பொருத்தளவில் இதுவரை 202 தெருக்களை மாநகராட்சி தனிமைப்படுத்தியுள்ளது.

  • ராயபுரம் - 53 தெருக்கள்
  • திரு.வி.க நகர் - 43 தெருக்கள்
  • தேனாம்பேட்டை - 27 தெருக்கள்
  • தண்டையார்பேட்டை - 23 தெருக்கள்
  • திருவான்மியூர் - 9 தெருக்கள்
  • கோடம்பாக்கம் - 9 தெருக்கள்
  • வளசரவாக்கம் - 9 தெருக்கள்
  • அண்ணா நகர் - 7 தெருக்கள்
  • பெருங்குடி - 7 தெருக்கள்
  • அடையாறு - 5 தெருக்கள்
  • மாதவரம் - 3 தெருக்கள்
  • அம்பத்தூர் - 2 தெருக்கள்
  • ஆலந்தூர் - 2 தெருக்கள்
  • சோழிங்கநல்லூர் - 2 தெருக்கள்
  • மணலி - 1 தெரு
தனிமைப்படுத்தப்பட்டத் தெருக்களுக்கு ஒரு நாளுக்கு இரண்டு முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது

தனிமைப்படுத்தப்பட்டத் தெருக்களுக்கு ஒரு நாளுக்கு இரண்டு முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அங்கு வாழும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் மாநகராட்சிப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் அனுமதி பெற்ற தன்னார்வலர்கள் தகுந்த பாதுகாப்புடன் வழங்கி வருகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்ட தெருக்கள் தொடர் கண்காணிப்பில் இருக்கும்

இது தொடர்பாக மணலி மண்டல அலுவலரிடம் பேசியபோது, "கரோனா பாதித்தவர் தெருக்களை தமைப்படுத்தியுள்ளோம். அங்குள்ளவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை பாதுகாப்புடன் வழங்கி வருகிறோம். அங்குள்ள வீட்டுக் குப்பைகளை தனியாக சேகரித்து வருகிறோம். அந்தத் தெருக்களில் இருக்கும் மக்களை வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். மேலும், அடுத்த அறிவிப்பு மாநகராட்சியில் இருந்து வரும் வரை தெருக்கள் தனிமைப்படுத்தல் நீட்டிக்கப்படும் " எனத் தெரிவித்தார்.

’202’ - சென்னையில் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள தெருக்களின் எண்ணிக்கை!

இதையும் படிங்க: 'ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தை முடக்குகின்றன பால்கனி அரசுகள்' - கமல்ஹாசன் கடும் தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details