தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரோகிணி திரையரங்கிற்கு 15ஆயிரம் அபராதம் - அதிக கட்டண வசூலால் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி! - 15 thousand

சென்னை: அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் விலைக்கு சினிமா டிக்கெட் கட்டணம் வசூலித்த சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Rohini theater chennai

By

Published : Sep 24, 2019, 12:51 PM IST

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்க காம்ப்ளக்ஸ் திரையரங்கில் குறைந்தபட்ச கட்டணமாக 40 ரூபாயும் அதிகபட்சக் கட்டணமாக 100 ரூபாயும் மட்டுமே அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மல்ட்டிபிளக்ஸ் வகையில் இல்லாத நிலையிலும், நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதி என்ற நிலையிலும் இந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு நிர்ணயித்த விலையைவிட இங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் புகார்கள் அதிக அளவு எழும் நிலையில், பண்டிகை நாட்களிலும், பிரபல நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போதும் முதல் மூன்று நாட்கள் டிக்கெட் விலை பல மடங்கு உயர்த்தி விற்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செம்பியம் தேவராஜன் என்பவர், 'கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு ரோகிணி திரையரங்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.

அப்போது, டிக்கெட் கட்டணமாக 150 ரூபாய், முன்பதிவுக் கட்டணமாக 35 ரூபாய் 40 பைசா என மொத்தமாக 185 ரூபாய் 40 பைசாவை கணக்கிலிருந்து பிடித்தம் செய்துள்ளனர். இதையடுத்து, ரோகிணி திரையரங்கின் கூடுதல் கட்டண வசூலால் தனக்கு நேர்ந்த மன உளைச்சலுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், கூடுதலாக வசூலித்த கட்டணத்தையும் வழங்க உத்தரவிடக் கோரி’ சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் விசாரணை தலைவர் லட்சுமிகாந்தன், உறுப்பினர் ஜெயந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. அதில் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்ட 110 ரூபாயையும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கான இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாயும், கூடுதல் கட்டண வசூலுக்கான அபராதமாக ஐந்து ஆயிரம் ரூபாயும் வழங்குமாறு ரோகிணி திரையரங்க நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:

ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை!

ABOUT THE AUTHOR

...view details