தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாதவரம் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் - கே.என்.நேரு

மாதவரம் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

By

Published : May 7, 2022, 9:17 AM IST

மாதவரம் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்
மாதவரம் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்

சென்னை:மாதவரம் பகுதியில் 1,246 தெருக்களில் பாதாள சாக்கடை இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர், இதனால் நிலத்தடி நீர் மாசு அடைந்துள்ளது. அதை சரி செய்து கொடுக்க வேண்டும் என மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ”சென்னை மாநகராட்சி பகுதிகளில் அண்ணா நகர், போட் கிளப், அடையார் போன்ற இடங்களில் சொத்து வரி 1 சதுர அடிக்கு 1.30 ரூபாய் தான் கட்டுகிறார்கள். ஆனால் மாதவரத்தில் மக்கள் 1 சதுர அடிக்கு 3 ரூபாய் செலுத்துகிறார்கள்.

அதேபோல் வணிக வளாகத்திற்கு 10 ரூபாய் வரை வரி கட்டுகிறார்கள்.செல்வந்தர்கள் வசிக்கும் இடத்தில் வரி குறைவாக இருக்கும் சூழலில் ஏழைகள் வசிக்கும் பகுதியில் குறைக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு அமைச்சர் கே.என்.நேரு, பாதாள சாக்கடை பணிகள் 241.36 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இது வரை 40% பணிகள் முடிவடைந்துள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்குள் பாதாள சாக்கடைப் பணிகள் முடிக்கப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆவடியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் - அமைச்சர் கே.என்.நேரு

ABOUT THE AUTHOR

...view details