சென்னை: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கடந்த மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் வழங்கிய வெற்றியை விட அமோக ஆதரவுடன் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மொத்தம் 74 ஊராட்சி ஒன்றியங்களில் 73-லும், 140 மாவட்ட ஊராட்சிகளில் 138-லும் மகத்தான வெற்றி தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் இக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்
கடந்த ஐந்து மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு நற்சான்றிதழை இத்தேர்தல் வெற்றி மூலம் மக்கள் பரிசளித்துள்ளதாக தெரிவித்த அவர், தமிழ்நாடு அரசு நிறைவேற்றுகிற திட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக பயனாளிகளுக்கு முழுமையாக சேருவதற்கு இந்த வெற்றி உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.