தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குஷ்பூ பாஜகவில் இணைய சுந்தர்.சி தான் காரணம் - கே.எஸ்.அழகிரி - குஷ்பூ

நடிகை குஷ்பூ பாஜகவில் இணைவதற்கு அவரது கணவர் சுந்தர்.சியின் நிர்பந்தமே காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

tamilnadu news kushbu ks alagiri bjp தமிழ்நாடு செய்திகள் குஷ்பூ கே.எஸ்.அழகிரி
tamilnadu news kushbu ks alagiri bjp தமிழ்நாடு செய்திகள் குஷ்பூ கே.எஸ்.அழகிரி

By

Published : Oct 12, 2020, 2:06 PM IST

Updated : Oct 12, 2020, 2:19 PM IST

திருவண்ணாமலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ கடந்த ஆறு மாத காலமாகவே கட்சி விரோத செயல்களில் குஷ்பூ ஈடுபட்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் அவருக்கு மிகப் பெரிய மரியாதையைக் கொடுத்தது.

அகில இந்திய செய்தித் தொடர்பாளர் என்ற மிகப்பெரிய பதவியை கொடுத்தும், அதில் அவருக்கு திருப்தி வரவில்லை என்றால், அவரை கையாள்வது மிகவும் கடினம்.

இங்கேயே தாக்குப்பிடிக்க முடியாதவர், பாஜகவில் நிலையாக இருக்க முடியாது. தவறை எண்ணி பிற்காலத்தில் அவர் வருத்தப்படுவார். காங்கிரசிலிருந்து குஷ்பூ செல்வதால் கட்சிக்கு ஒரு காலத்திலும் இழப்பு கிடையாது. இப்போது கூட இவர் தான் அங்கு செல்கிறாரே தவிர, பாஜகவினர் விரும்பி அவரை அழைக்க வில்லை “ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 5 நாள்களுக்கு முன்பு வரை, தான் பாஜகவில் சேரவுள்ளதாக இரண்டு ரூபாய் பெற்றுக்கொண்டு அக்கட்சியினர் வதந்தி பரப்புவதாக குறை கூறிய குஷ்பூ, ஆறாவது நாள் பாஜகவில் சேர வேண்டிய தேவை என்ன? குஷ்பூ பாஜகவில் இணைவதற்கு தனது கணவர் சுந்தர்.சியின் நிர்பந்தமே காரணம் என்று கூறப்படுகிறது. தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு நேர் எதிரான முடிவை தற்போது குஷ்பூ எடுத்திருக்கிறார். அவர் நன்றாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியினர் மேடை அமைத்தால் அதில் பேசிவிட்டு விளம்பரம் பெறக்கூடியவர். பாஜகவின் சேருவதால் எந்த லாபமும் அந்தக் கட்சிக்கு ஏற்படப்போவதில்லை. சில நாள்களுக்கு ஊடகத்திற்கு குஷ்புவால் தீனி போட முடியும். இதைத் தவிர எந்த வகையிலும் யாருக்கும் எந்த பயனும் தரப்போவதில்லை “ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாஜகவில் குஷ்பூ? சுமுகமாக இருக்குமா பயணம்...

Last Updated : Oct 12, 2020, 2:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details