தமாகா சார்பில் சென்னை பூங்கா நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்று உறுப்பினராக 2006ஆம் ஆண்டில் தேர்வுசெய்யப்பட்டார். 1959, 1963, 1968ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பில் சென்னை மாநகராட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் எஸ்.ஜி. விநாயகமூர்த்தி காலமானார்! - காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ஜி. விநாயகமூர்த்தி சென்னையில் இன்று (நவம்பர் 16) காலமானார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்!
1967 முதல் 1974 வரை வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராகச் செயல்பட்டவர், சென்னை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்.
அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.