சென்னை: கலைவாணர் அரங்க கூட்டரங்கில் அரசியலமைப்பு குறித்த உரையரங்கம் நடைபெற்றது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், ராகேஷ் சட்ட அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், இந்திய ஒன்றியத்தின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் கபில் சிபில், இந்து குழுமத்தின் இயக்குநர் என்.ராம் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ அவர்களின் மகன் ராகேஷ் (சட்ட மாணவர்) பெயரில் நிறுவப்பட்டுள்ள ராகேஷ் சட்ட அறக்கட்டளையை தொடங்கி வைத்து, ராகேஷின் நினைவுத் திருவுருவப்படத்தையும் திறந்து வைத்தார்.
பெகாசஸ் விவகாரத்தில் என்ன நடந்தது?: உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், பாராளுமன்ற உறுப்பினருமான கபில் சிபில் மேடையில் பேசியபோது, "பாராளுமன்றத்தில் உங்களுடைய கருத்தை நீங்கள் சுதந்திரமாக கூறமுடியாது.
மசோதாவிற்கு எந்த மாதிரியான வாக்கை அளிக்க வேண்டும் என ஆளுகின்ற அரசு முடிவு செய்கிறது. அரசியல் சட்டங்கள் அங்கு செல்லுபடியாகாது. மெஜாரிட்டி அரசு, மெஜாரிட்டி என்ற காரணத்தால் அவர்களுக்கு தேவையான சட்டங்களை பாராளுமன்றத்தில் எளிதாக சட்டமாக்கி வருகிறது.
நாட்டில் ஏழைகள், ஏழைகளாகவே இருக்கின்றனர். பணக்காரர்கள் மேலும் பணக்காரராக மாறுகின்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டங்களும் பணக்காரர்களுக்கு உதவும் வகையில்தான் உள்ளது.
மத்திய அரசுதான் ஆளுநரை நியமிக்கிறது எனக் கலைவாணர் அரங்க கூட்டரங்கில் அரசியலமைப்பு குறித்த உரையரங்கத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபில் பேசினார் பெகாசஸ் விவகாரத்தில் என்ன நடந்தது? என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. யாரும் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை. அனைவரும் அமைதியாக கடந்து செல்கின்றனர். மக்களின் அடிப்படை உரிமைகள் முன்வைத்து இயற்றக்கூடிய சட்ட முன்வடிவை அனுமதிக்க வேண்டும். அதில் அரசியல் காரணங்களுக்காக தடுக்கக்கூடாது.
தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு: அதேபோல் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறக்கூடிய வகையில், எந்த சட்டமும் இருக்க கூடாது. அதனை நீதிமன்றமும் ஏற்காது. நாட்டில் ஜனநாயகம் மீறப்படுவதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
உதாரணமாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நிதி அமைச்சரிடம் கூட ஆலோசிக்கவில்லை. நடைபெறும் தேர்தல்களில் ஏதேனும் ஒரு கட்சி வெற்றிப்பெற்றதாக அறிவிப்பதே ஐனநாயகம் எனக் கருத்தப்படுகிறது.
நாட்டில் அரசியல் கட்சிகளுக்கான நிதிகளை பெரு முதலாளிகளே வழங்குகின்றனர். அவர்களிடம் சமூக நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்? நாட்டில் சமூக அநீதி, அரசியல் அநீதி, பொருளாதார அநீதிகள் மட்டுமே நிகழ்கின்றன.
நாட்டில் நீதி, சமூகம், பொருளாதாரம், பாதுகாப்பு நடவடிக்கை இல்லாத நிலை இருக்கிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிதியமைச்சர் கலந்து ஆலோசிக்காத நிலையில், அந்த முடிவு எடுக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் சமரசம் செய்யப்படுகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சிலரே குரல் எழுப்பியுள்ளனர். டிஜிட்டல் இந்தியாவில், 24 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி உள்ளது. இந்தச் சூழலில்தான் டிஜிட்டல் இந்தியா குறித்து பேசுகின்றனர். 12 சதவிகிதம் இணைப்பு எந்த வடிவத்தில் உள்ளது? ஃபைபர் ஆப்டிக் அனைத்தையும் இணைக்க வேண்டும்.
சிபிஐ விசாரிக்க முடியாது: ஆனால், அது செய்யப்படவில்லை. குழந்தைகள் இரத்த சோகைக்கு ஆளாகிறார்கள். அமெரிக்கா 16 சதவீதத்தை சுகாதாரப் பாதுகாப்புக்காகவும், இங்கிலாந்து 10 சதவீதத்தை சுகாதாரப் பாதுகாப்பிற்காகவும் செலவிடுகின்றன. ஆனால், இந்தியாவில் வெறும் 6 சதவீதம் மட்டுமே செலவிடுகின்றனர்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் பேசுவதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் செவிசாய்க்க மாட்டார்கள். மேலும், சட்டம் ஒழுங்கை அமல்படுத்தும் காவல் துறை நீதிமன்றங்கள் தனித்துவமாக, மாநிலத்தின் அனுமதியின்றி சிபிஐ விசாரிக்க முடியாது. ஆனால், பி.எம்.எல்.ஏ மற்றும் அமலாக்கத் துறைக்கு வரையரை கிடையாது.
பல்கலைக்கழகங்களில், வன்முறையாளர்கள் தற்போது இறங்கியுள்ளனர். அதனால், போர் சூழல் நிலவி வருகிறது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக நடத்தப்படும் மாநில அரசுகள் நசுக்கப்படுகிறது. கூட்டாட்சி தத்துவமே தற்போது இந்தியாவில் நடைபெறவில்லை. மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கு முறையாக வழங்கப்படுவதில்லை.
ஆளுநருக்கு குறிப்பிட்ட அதிகாரம் மட்டுமே உள்ளது: மாநிலப் பட்டியலில் உள்ளவை மத்திய பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக கல்வி, தனிப்பட்ட முறையில், நான் அதற்கு எதிராக உள்ளேன். நீட் தேர்வை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசின்கீழ் கல்வி உள்ளது. கல்வியும் சுகாதாரமும் மாநில அரசின்கீழ் வரவேண்டும் என்பதே எனது கருத்து.
அப்படி வரும்போது மட்டுமே கூட்டாட்சித் தத்துவம் என்பது நடைமுறைப்படுத்தப்படும். ஆசிரியர்கள் இல்லாமலேயே கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஊடகங்கள் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
எமர்ஜென்சியை விட தற்போது மோசமான சூழ்நிலை உள்ளது. தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், கிடப்பில் வைத்திருக்கிறார்.
ஆளுநர் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை மறு பரிசீலனைக்கு திருப்பி அனுப்பி வைக்காமல், காலம் தாழ்த்தி வருகிறார். மேலும், மத்திய அரசுதான் ஆளுநரை நியமிக்கிறது. ஆளுநருக்கு குறிப்பிட்ட அதிகாரம் மட்டுமே உள்ளது" என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபில் பேசினார்.
இதையும் படிங்க: 'பிரிட்டிஷாரிடம் கைகட்டி நின்றது ஆர்எஸ்எஸ்- திக் விஜய் சிங்!'