நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துவருகின்றது. கடந்த சில வருடங்களாக 15 விழுக்காடுவரை விலை உயர்ந்து வந்தது. தற்போது கரோனா தொற்று காரணமாக மக்கள் அவதிப்பட்டுவரும் நிலையில் 22 விழுக்காடுவரை மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தியுள்ளது. இதனை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் புதுச்சேரில் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்! - Petrol Price Hike
புதுச்சேரி: பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்! Congress Party Protest Against Petrol Price Hike In Pudhucherry](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:05:10:1593423310-tn-pud-04-congress-petrol-protest-7205842-29062020145617-2906f-01484-826.jpg)
Congress Party Protest Against Petrol Price Hike In Pudhucherry
இதில், மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க:நாகையில் கரோனா பாதிப்பு: 4 மருத்துவர்கள், ஒரு செவிலிக்கு தொற்று உறுதி!