2021 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்க்கொள்வது தொடர்பாக காணொளி வாயிலான கலந்தாலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த காணொளி சந்திப்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லை என்றாலும் வலிமைமிக்க இயக்கமாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. கடுமையான உழைப்பை செலுத்துவதன் மூலமாக கட்சி மேலும் வலிமை பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதிமுக ஆட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுவரும் தமிழக மக்களுக்கு விடிவு ஏற்படுகிற பகையில் வருகின்ற சட்டப்பேரவை தேர்தல் அமைய காங்கிரஸ் கட்சியினர் உழைக்க வேண்டும்” என தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தமிழக மக்களுக்கு விடிவு ஏற்படுகிற வகையில் சட்டப்பேரவை தேர்தல் அமைய உழைக்க வேண்டும்! மத்திய பாஜக அரசின் நீட், புதிய வேளாண் சட்டங்கள், இந்தி திணிப்பு போன்ற தமிழக விரோத நடவடிக்கைகள் தொடர்பாகவும், அதற்கு தமிழ்நாடு துணைப் போவது குறித்தும் தமிழ்நாட்டு மக்களிடம் விரிவாக கொண்டு சேர்க்கும் வகையில் பரப்புரை செய்ய இந்த கூட்டத்தில் முடிவெடுக்கட்டுள்ளதாக அறிய முடிகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை இந்த கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கே.வி.தங்கபாலு, முகுல் வாஸ்னிக், கே.சி. வேணுகோபால், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க :7.5 சதவீத உள் இடஒதுக்கீடு : தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவு