சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கத்திற்கு வந்திருந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பச்சை வண்ண முண்டாசு கட்டியிருந்தனர். பின்னர் அவர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையை புறக்கணிப்பதாக அறிவித்து வெளிநடப்பு செய்தனர். மேலும், திமுகவை போன்று கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர்! - காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பு! - ஆளுநர் உரை
சென்னை: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியும் அறிவித்துள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ், ”விவசாயிகளின் குரல்வளையை மத்திய அரசு நெறிக்கிறது. அதற்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு துணை போகும் மோசமான பாஜக அரசை வீழ்த்தும் வரையில் காங்கிரஸ் கட்சி ஓயாது. அந்த மோசமான ஆட்சிக்கு எல்லாவகையிலும் துணை போகும் அதிமுக அரசை கண்டித்து இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூட்டத்தொடர் முழுவதும் புறக்கணிப்பு! - மு.க.ஸ்டாலின்