தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட தினேஷ் குண்டுராவ், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், ”காங்கிரஸ்-திமுக கூட்டணி வலுவாக உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமையும். அதற்கு காங்கிரஸ் கட்சி பக்கபலமாக இருந்து பாடுபடும்.