தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில், 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (மார்ச் 11) தொகுதிப் பங்கீடு குறித்த பட்டியலும் வெளியானது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில், அதில், பல தவறுகள் நடப்பதாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் எம்.பி. விஷ்ணு பிரசாத், தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
'ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவு' - கொந்தளிக்கும் கோபன்னா - ஜோதிமணியை விமர்சித்து ஜோதிமணி ட்வீட்
சென்னை: "ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்" என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில ஊடகப்பிரிவு தலைவர் கோபன்னா ட்வீட் செய்துள்ளார்.
!['ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவு' - கொந்தளிக்கும் கோபன்னா 'ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவு' - கொந்தளிக்கும் கோபன்னா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10997408-thumbnail-3x2-aa.jpg)
மேலும், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும், "தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை" என பகிரங்கமாக குற்றஞ்சாட்டி ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில ஊடகப்பிரிவு தலைவர் கோபன்னா, ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், "காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்துகிற ஜோதிமணி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.