சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற ஊராட்சி மன்றத் தேர்தல் பரப்புரையின்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைப் பற்றியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றியும் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாகப் புகார் மனு அளிக்கப்பட்டது.
சீமான் மீது புகார்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயக்குமார், மாநிலத் துணைத் தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபுவிடம் புகார் மனு அளித்தனர்.
பின்னர் காவல் துறைத் தலைவர் அலுவலகத்தின் வாயிலில் செய்தியாளரைச் சந்தித்த ஜெயக்குமார், "காங்கிரஸ் கட்சித் தலைவர்களைத் தரக்குறைவாக, பரப்புரையில் சீமான் பேசியுள்ளார். மிக அவதூறான சொற்களைப் பயன்படுத்தி காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்த சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் துறையில் புகார் அளித்துள்ளோம்.