தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு! - Chennai District News

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நாளை (மார்ச் 16) காலை 11 மணிக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

By

Published : Mar 15, 2021, 5:06 PM IST

Updated : Mar 15, 2021, 5:42 PM IST

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காலை 11 மணியளவில் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிடவுள்ளார்.

இதில், அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்கவுள்ளனர்.

இதையும் படிங்க: 'குடும்ப அரசியல் செய்தால் என்னை நிராகரிப்பார்கள்' - வேட்புமனு தாக்கலுக்குப் பின் உதயநிதி பேட்டி

Last Updated : Mar 15, 2021, 5:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details