புதுச்சேரி:புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு - 15, திமுகவிற்கு - 13, விசிகவுக்கு - 1, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 என இடங்கள் ஒதுக்கப்பட்டன. தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி, திமுக இடையே அதிருப்தி எழுந்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அரியாங்குப்பம், முதலியார் பேட்டை, லாஸ்பேட்டை உள்ளிட்ட தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று(மார்ச் 12) நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள், கடந்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 21 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தற்போது, வெறும் 15 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. குறைந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததற்கு கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.