தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேளச்சேரி அதிமுக வேட்பாளர் மீது காங்கிரஸ் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார்! - Chief Election Officer Satyapradha Sahu

சென்னை: வேளச்சேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் மீது காங்கிரஸ் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி

By

Published : Mar 23, 2021, 4:39 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 23) தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் காங்கிரஸ் சார்பில் தாமோதரன் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் புகார் மனுவை அளித்தார்.

அதில், வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் ஹசன் மௌலானா மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதற்குக் காரணம் அதிமுக வேட்பாளர் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியினர் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு
செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியினர்
பின்னர் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், “கடந்த 21ஆம் தேதி இரவு நேரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மௌலானா மீது அதிமுகவைச் சார்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு காரணம் அதிமுக வேட்பாளர் அசோக். மேலும் இது குறித்து காவல் துறையில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
காங்கிரஸ் வேட்பாளருக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் தெரிவித்துள்ளளோம்.
மேலும் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் காவல் துறை அலுவலர்கள் பணியிட மாற்றம் அளிக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரிடம் தெரிவித்துள்ளோம். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அலுவலர் தெரிவித்தார்”என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details