தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அனைவருக்கும் இலவச தடுப்பூசி - காங்கிரஸ் கோரிக்கை - vaccination

18 வயது நிரம்பிய அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத்தலைவர் செல்வப் பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்த காங்கிரஸ் கோரிக்கை
அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்த காங்கிரஸ் கோரிக்கை

By

Published : Jun 4, 2021, 12:41 PM IST

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தி, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனை வலியுறுத்தி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் காங்கிரஸ் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட உள்ளது. இதற்காக ஆளுநரை சந்திக்க நேரம் கோரி உள்ளோம், அனுமதி கிடைத்ததும் அவரை சந்திப்போம். அதே போல மாவட்ட நீதிபதிகளிடம் மனு கொடுக்க உள்ளோம்.

தற்போது நாள் ஒன்றுக்கு 14 லட்சம் தடுப்பூசி தான் போடப்படுகிறது. இந்த வேகத்தில் தடுப்பூசி செலுத்தினால், அனைவருக்கும் தடுப்பூசி பூட 3 ஆண்டுகள் ஆகும்.

அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்த காங்கிரஸ் கோரிக்கை
இதனை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இதுவரை 6 கோடி தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளது.தற்போது தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்களுக்கு அச்சம் இருந்தது. இப்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி கிடைக்கவில்லை" என்றார்.மேலும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே அழைக்கலாம், அதில் தவறில்லை, அரசியலமைப்பு சட்டத்தை சிதைப்பவர்கள் தான் அது குறித்து கவலைப்பட வேண்டும் என செல்வப் பெருந்தகை பதிலளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details