தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ்: 20 பேருக்கு ஒமைக்ரான் உறுதி! - சென்னை ஒமைக்ரான் பாதிப்புகள்

சென்னை குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸில் பணியாற்றுபவர்களில் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில், 20 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்று உறுதி
ஒமைக்ரான் தொற்று உறுதி

By

Published : Jan 7, 2022, 7:21 PM IST

சென்னை: குரோம்பேட்டையில் செயல்பட்டுவரும் சரவணா ஸ்டோர்ஸில் பணிபுரியும் ஊழியர்களில் சிலருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதால் அங்குப் பணிபுரியும் சுமார் 250 ஊழியர்களுக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா தொற்று

இதில், 22 ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஊழியர்கள் தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.

ஒமைக்ரான் தொற்று

அவர்களில் 20 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதற்கிடையே சில ஊழியர்களின் பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. எனவே தொற்றின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூடப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ்

சரவணா ஸ்டோர்ஸில் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி

சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி, சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட்டது.

குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி மாணவர்கள் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 23 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கடவுளை ஆஜர்படுத்த உத்தரவிட்ட கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details