தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சர்வாதிகாரிகள் கைகளில் நாடு சிக்கியுள்ளது...! - தவ்ஹீத் ஜமாத் - conducted by thavkith jamad

சென்னை: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், காஷ்மீர் மக்கள் பண்பாடு, கலாச்சாரம் மீதான தாக்குதலை கண்டித்து சிந்தாதிரிபேட்டையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தவ்ஹீத் ஜமாத்

By

Published : Aug 30, 2019, 1:50 AM IST

காஷ்மீர் மக்கள் பண்பாடு, கலாச்சாரம் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னை சிந்தாதிரிபேட்டையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன், இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தேசிய தலைவர் எஸ்.எம். பாக்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம்.பாக்கர், "காஷ்மீரில் 370 மற்றும் 35 ஏ ரத்து செய்யப்பட்ட பிறகு அதை எதிர்த்து நாடெங்கும் குரல் ஒலிக்கிறதோ இல்லையோ, தமிழ்நாட்டில் இந்த குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அதற்குக் காரணம் தமிழ்நாட்டில் இருக்கும் சிந்தனையாளர்கள். தமிழ்நாடு எப்போதும் சுயமாகவும், பகுத்தறிவாகவும் சிந்திக்கும். பகுத்தறிவிலிருந்து சகலத்தையும் பார் என்கிற விதத்தில் காஷ்மீரின் உரிமை பறிக்கப்பட்டதை போல், நாளை நம் மாநிலத்தின் உரிமையும் பறிக்கப்படலாம்.

ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கட்சி என்று சர்வாதிகாரத்தின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. அறிவிக்கப்படாத ஒரு அவசரக்காலம் அமலில் உள்ளது. அருதிப் பெரும்பான்மை வைத்து எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது தான் முதன்முதலில் உச்சநீதிமன்றம் வாய் திறந்துள்ளது. யார் யாருக்கு ஆணையிட வேண்டும் என்று நீங்கள் சொல்லாதீர்கள் என்று கூறியிருக்கிறது.

காஷ்மீர் மக்கள் பண்பாடு, கலாச்சாரம் மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று சென்னை சிந்தாதிரிபேட்டையில் நடைபெற்ற கருத்தரங்கம்

யாரெல்லாம் சர்வாதிகாரிகளாய் இருந்தார்களோ, அவர்களெல்லாம் இன்றைக்கு இல்லை. அந்தக் காலம் வெகு தூரத்தில் இல்லை. அந்த சுதந்திரத்துக்கு முதலில் வித்திடக்கூடியதாகத் தமிழ்நாடு இருக்கும். அதில் கம்யூனிஸ்ட் தோழர்கள் முதன்மையானவர்களாக இருப்பார்கள். நாங்கள் உண்மையை பேசினால் எங்களை பயங்கரவாதி என்பீர்களா என்று திராவிடர் கழகம் பவள விழாவில் தி.மு.க. தலைவர் அற்புதமாகப் பேசியுள்ளார்.

இவர்கள் சில சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். அந்த சலசலப்பு காஷ்மீரில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் அது கலகலத்துக் கொண்டிருக்கிறது. ஒற்றை தலைமையின் கீழ் அவர்கள் கொண்டுவரத் துடிப்பது, அதிபர் ஆட்சியே என்று மம்தா பானர்ஜி அழகாகத் தெரிவித்துள்ளார். அந்த அதிபர் ஆட்சியைக் கொண்டுவர இந்திரா காந்தி முயற்சி செய்து மிகப்பெரிய தோல்வி அடைந்தார். அந்த தோல்வி மோடிக்கும் வரும் என்பதில் அச்சமில்லை" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details