சென்னை:அத்தியாவசிய பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், மின்சார திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும் மற்றும் தமிழ்நாட்டில் சொத்து வரி, மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற்றிட வலியுறுத்தி நேற்றைய (ஆக.30) தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அந்த வகையில் சென்னை அண்ணாசாலை தலைமை தபால் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.