சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் நபர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மாநகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும். முதல் அரையாண்டில் செப்டம்பர் வரையிலும் அடுத்த அரையாண்டு ஏப்ரல் வரையிலும் செலுத்தலாம்.
அதன்படி, சொத்து வரி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி 2ஆம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 விழுக்காடு சலுகை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
2021 -22ஆம் நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் மொத்தமாகவே ரூ.1,240 கோடி வரி வசூலாகியிருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டுமே ரூ.945 கோடி வரி வசூலாகியுள்ளது. இந்த நிலையில் மாநகராட்சியின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை